வவுனியா - புளியங்குளத்தில் விபத்தில் ஒருவர் பலி: இருவர் படுகாயம்
வவுனியா - புளியங்குளத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக புளியங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (07.03.2026) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.
ஒருவர் உயிரிழப்பு
முல்லைத்தீவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்ற துவிச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் துவிச்சக்கர வண்டி சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிளின் பயணித்த மற்றொரு நபர் பலியாகியுள்ளார்.
குருணாகல் பகுதியை சேர்ந்த 59 வயதுடைய உமர் லெப்பை அப்துல் ரவூப் என்பவரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா- புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
சர்ச்சைகளுக்கு மத்தியிலும் கெத்து காட்டும் த்ரிஷா! மே குறித்து என்ன சொல்லியுள்ளார் தெரியுமா? Manithan
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri