வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Photos)

Trincomalee Sri Lanka
By S P Thas May 09, 2022 08:04 AM GMT
Report

தனியார் வைத்தியசாலை ஒன்றில் ETU அவசர முதலுதவி பிரிவு உரியமுறையில் இயங்காமையினால் ஒருவர் உயிரிழந்ததாகவும் இந்த உயிரிழப்புக்கு குறித்த தனியார் வைத்தியசாலை நிர்வாகமே காரணம் என குற்றம் சுமத்தி உறவினர்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர்.

இச்சம்பவமானது நேற்றையதினம்(08) திருகோணமலை - உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனுராதபுர சந்தி பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

கடந்த 2ஆம் திகதி திருகோணமலை பாலையூற்று - பூம்புகார் பிரதேசத்தில் மயக்கமுற்ற நிலையில் (34-வயது) நபரை குறித்த தனியார் வைத்தியசாலைக்கு அவசர முதலுதவி பிரிவுக்கு (ETU) அனுமதிக்க சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாது என திருப்பி அனுப்பியுள்ளனர், இதனைத்தொடர்ந்து  நபரை திருகோணமலை தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அந்நபர் உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Photos) | One Person Dies Emergency First Aid Unit Hospital

மேலும் இவ்வாறு குறித்த நபர் உயிரிழந்தமைக்கான சரியான காரணம் தெரியவராத நிலையில் நேற்றையதினம்(08) மரணத்திற்கான வைத்திய சான்றிதழ் உறவினர்களுக்கு கையளிக்கப்பட்ட போது குறித்த நபர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

“உயிரிழந்த நபரை முன்பே தனியார் வைத்தியசாலையில் அனுமதித்து முதலுதவி செய்திருந்தால் அந்த நபரை காப்பாற்றி இருக்கலாம்” எனவும் இவ்வாறு “உயிரிழந்த நபரின் மரணத்திற்கு தனியார் வைத்தியசாலையே காரணமெனவும்” வைத்தியசாலைக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Photos) | One Person Dies Emergency First Aid Unit Hospital

மேலும் குறித்த வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள காட்சி பலகையில் அவசர முதலுதவி பிரிவு (ETU) 24 மணித்தியாலமும் இயக்கத்தில் உள்ளதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள போதிலும் குறித்த தனியார் வைத்தியசாலையில் அவ்வாறு அப்பிரிவு செயற்பாட்டில் இல்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காட்சிப்படுத்தப்பட்ட நடைமுறையில் இல்லாத அனைத்து பிரிவுகளும் உடன் அகற்றப்பட வேண்டும் எனவும் குறித்த தனியார் வைத்தியசாலை மக்களை சிரமங்களுக்குள்ளாக்குவதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் இருந்தவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வைத்தியசாலையில் ஒருவர் உயிரிழப்பு: ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் (Photos) | One Person Dies Emergency First Aid Unit Hospital

இதனைத்தொடர்ந்து  அவ்விடத்திற்கு சமூகமளித்த உப்புவெளி பொலிஸார் வைத்தியசாலை நிர்வாகத்துடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு குறித்த வைத்தியசாலையில் காட்சிப்படுத்தப்பட்ட நடைமுறையில் இல்லாத அனைத்து பிரிவுகளையும் அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனையடுத்து  வைத்தியசாலை நிர்வாகத்தினரினால் அனைத்து பிரிவுகளும் காட்சி பலகையில் இருந்து முற்றாக நீக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, மருதங்குளம், திருநாவற்குளம்

30 Jul, 2022
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US