கொழும்பு நோக்கி வந்த பேருந்து மோதி ஒருவர் பலி
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரை சொகுசு தனியார் பேருந்து ஒன்றும் மோட்டார்சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் மகொன, முங்கென பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற அரை சொகுசு தனியார் பேருந்து , கொழும்பில் இருந்து வந்த மோட்டார்சைக்கிள் வடக்கு பயாகலை சந்திக்கு அருகில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த மோட்டார்சைக்கிள் சாரதி களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri