திடீர் உடல்நலக்குறைவால் பேருந்தில் பயணித்தவருக்கு ஏற்பட்ட கதி!
பேருந்தின் முன்பக்க மிதிபலகைக்கு அருகில் பயணித்த ஒருவர் பேருந்திலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார்.
ருவன்வெல்ல, ஹும்பஸ்வலான பகுதியில் ருவன்வெல்லவிலிருந்து தன்னோருவ நோக்கிப் பயணித்த பயணிகள் பேருந்திலிருந்து விழுந்தே அவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மிதி பலகையில் அமர்ந்திருந்த போது தவறி விழுந்ததாகவும் தெரியவந்துள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
விபத்தைத் தொடர்ந்து அவர் கவலைக்கிடமான நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் ஹும்பஸ்வலான, ருவன்வெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் கரவனெல்ல வைத்தியசாலையின் பிரேதப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.

புதிய வீட்டிற்கு மாறிய பிக்பாஸ் 8 புகழ் முத்துக்குமரன்... அவரது வீடு எப்படி இருக்கு பாருங்க, வீடியோ இதோ Cineulagam

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் முக்கிய பிரபலங்கள் மாற்றம்.. யார் யார் தெரியுமா? Cineulagam
