விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது
மீன் ஏற்றுமதியாளர் போல் சூட்சுமமாக மறைத்து எடுத்துச் சென்ற நான்கு கிலோ கஞ்சாவுடன் விசேட அதிரடிப்படையினரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த மீன் வர்த்தக வாகனத்தில் இவ்வாறு
கஞ்சா பொதி எடுத்துச் செல்லப்படுவது தொடர்பில் கிளிநொச்சி விசேட
அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலிற்கு அமைவாகச் சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே
இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நோக்கிப் பயணித்த குறித்த வாகனத்தை ஆனையிறவு சோதனைச்சாவடியில் விசேட அதிரடிப்படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
இதன்போது சூட்சுமமாக மறைத்து எடுத்துச் செல்லப்பட்ட 4200 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதியை மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், வாகனமும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் வழக்குப் பதிவு
செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.










16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 21 மணி நேரம் முன்

மனிதகுலத்தை கட்டுப்படுத்தப்போகும் AI: 2026ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் அதிரவைக்கும் கணிப்புகள் News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
