சுகதார அதிகாரிக்கு இடையூறு விளைவித்த ஒருவர் கைது
பதுளை, மஹியங்கனையில் கோவிட் தொடர்பான கடமைகளில் ஈடுபட்டுள்ள பொது சுகாதார பரிசோதகரின் கடமைகளைத் தடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஹியங்கன, கெமுனுபுரவில் அவர் கைது செய்யப்பட்டார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
அவரை ஜூலை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒரு பௌத்த பிக்குவின் நெருங்கிய தொடர்புகளை அடையாளம் காண பொது சுகாதார பரி சோதகர்கள் முயன்ற போது அதனை தடுத்தமை தொடர்பிலேயே குறித்த பொதுமகன் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் பண்டாரகமையில் ஒரு கோவிட் நோயாளி, கோவிட் தொடர்பான கடமைகளில் ஈடுபட்ட ஒரு பொது சுகாதார ஆய்வாளரின் கடமைகளைத் தடுத்தார்.
இதன்போது அந்த கோவிட் நோயாளிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டமையை காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.





Gen Z போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம் - நேபாளத்தையடுத்து மற்றொரு நாட்டில் ஆட்சி கவிழ்ப்பு? News Lankasri

ஜெயிலர் 2 இன்னும் ரிலீஸ் ஆகல.. அதுக்குள்ள ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! என்ன தெரியுமா Cineulagam

அமெரிக்காவில் 11 வருடங்கள்... இந்தியா திரும்பியவர் 3 ஆண்டுகளில் உருவாக்கிய ரூ 280 கோடி நிறுவனம் News Lankasri
