ஈஸ்டர் தாக்குதல் சந்தேகநபர் ஒருவர் திடீரென உயிரிழப்பு
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர், உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில், பொரள்ளை பொலிஸார் இன்று (05) இதனைத் தெரிவித்துள்ளனர்.
கல்முனை − பள்ளிவாசல் வீதியைச் சேர்ந்த 42 வயதான சலிம் மொஹமட் கலீம் என்ற சந்தேகநபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக அவர் டிசம்பர் மாதம் 23ம் திகதி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சந்தேகநபர், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார், நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே, அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.