ஒரு மில்லியன் தன்னார்வலர்கள் திட்டம்:அழைப்பு விடுக்கும் அரசு
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தால் நடத்தப்படும் ஒரு மில்லியன் தன்னார்வலர்களை சேர்த்துக் கொள்வதற்கான பதிவுகளை volunteer.nysc.lk வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு இன்று (26) இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சில் நடைபெற்றது.
மேற்கொள்ளப்படவுள்ள செயற்பாடுகள்
ஒரு மில்லியன் தன்னார்வலர்கள் திட்டத்தின் கீழ் பதுளை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திட்டங்கள் குறித்தும் தெளிவுபடுத்தப்படவுள்ளன. மேலும் 1000 தன்னார்வ இளைஞர்கள் நாளை (27) மற்றும் நாளை மறுதினம் (28) பதுளை மாவட்டத்தில் பல வேலைகளை மேற்கொள்ளவுள்ளனர்.

குறித்த இரு நாட்களில், பேரிடரால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை புனரமைத்தல், நீர்ப்பாசன திட்டங்கள் மற்றும் வீதிகளை சுத்தம் செய்தல், பாதுகாப்பு முகாம்களில் உள்ள மக்களுக்கான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்துதல், குழந்தைகளுக்கான அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல் ஆகியன திட்டமிடப்பட்டுள்ளன.
பிரித்தானியாவில் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்த சோகம்: கொடூர தாக்குதலில் 80 வயது மூதாட்டி பலி News Lankasri
திறப்பு விழா நாளில் ஜனனிக்கு ஏற்பட்ட நெருக்கடி, எப்படி சமாளிக்க போகிறார்.... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam