இலங்கையில் சீன நாட்டவரின் தொழிலுக்கு ஒரு சட்டம், எம்மவர்களுக்கு இன்னொரு சட்டமா!
இலங்கையைச் சார்ந்த ஒருவர் சட்டவிரோதமாக அட்டை பண்ணை அமைத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.
சீன நாட்டவர் அமைத்தால் அவர்களுக்குச் சட்ட நடவடிக்கை இல்லையா என கிளிநொச்சி மாவட்ட மீனவ சம்மேளனத்தின் தலைவர் வைத்திலிங்கம் பாலசுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி கௌதாரி முனையில் உள்ள பூவரசன் தீவில் சட்டவிரோதமாகச் சீன நாட்டவர்கள் எந்த ஒரு அனுமதியும் பெறாமல் கடலட்டை பண்ணை அமைத்து தொழிலை மேற்கொண்டு வருகின்றார்கள்.
இவர்களைத் தடுப்பதற்கு அரசியல்வாதிகளுக்கோ, அதிகாரிகளுக்கோ தைரியமில்லை. எமது மக்கள் இவ்வாறு செயற்பட்டால் உடனடியாக அவற்றைப் பிடுங்கி எறிந்து விடுவார்கள்.
சீனா நாட்டவருக்கு ஒரு சட்டம், இங்கு இருப்பவர்களுக்கு இன்னொரு சட்டம் என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இதேபோன்று நாட்டை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்ற கோவிட் காரணமாகப் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டுக் காணப்படுகின்றது.
இதனால் கல்வி கற்கும் மாணவர்கள் பெரும் சிரமத்தின் மத்தியில் கல்வியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இணைய வழியிலான கல்வியை மேற்கொள்ள முடியாமல் பல கிராம மாணவர்கள் காணப்படுகின்றனர்.
வசதிப்படைத்தவர்கள் இணைய வழி கல்வியை மேற்கொள்ள கைத்தொலைபேசியை பாவித்து பிள்ளைகளைக் கல்வி கற்க வைக்கின்றார்கள். வசதி இல்லாதவர்களுக்கு கைத்தொலைபேசியும் இல்லை.
பின்தங்கிய கிராமங்களுக்கு இணைய வழி கல்வியை
மேற்கொள்ளத் தொலைத்தொடர்பு வசதிகளும் இல்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.





கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

பிரித்தானியாவில் துப்பாக்கி மூலம் குடும்பத்தை அச்சுறுத்திய நபர்: 4 மணிநேர போராட்டத்தில் சுட்டுப்பிடிப்பு News Lankasri
