வவுனியா - ஓமந்தையில் தொடருந்து மோதி பெண்ணொருவர் உயிரிழப்பு
வவுனியா - ஓமந்தையில் தொடருந்து மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்துச் சம்பவம் நேற்று(10.09.2024) இடம்பெற்றுள்ளது.
விபத்து சம்பவம்
யாழில் இருந்து வவுனியா நோக்கி நேற்று மாலை பயணித்த தொடருந்தானது புளியங்குளம் பகுதியை கடந்து ஓமந்தையை நோக்கி நகர்ந்த போது தொடருந்து தண்டவாளத்தில் நடந்து சென்ற பெண் மீது தொடருந்து மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில், குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், உயிரிழந்த பெண் சுமார் 35 - 45 வயது மதிக்கத்தக்கவர் எனவும், இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவித்த ஓமந்தைப் பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
