கரடியனாறு பகுதியில் காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கித்துள் வயல் பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 53 வயதுடைய பொண்ணுத்துறை கௌகிகரன் என்ற குடும்பஸ்தரே நேற்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து வயல் காவலுக்காக கித்துள் வயல் பகுதிக்கு சென்ற வேளையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் இன்று காலை மீட்கப்பட்டு தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பயணத்தடை காரணமாக மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் வாழும் விவசாயிகள் யானைகளின் தாக்குதல்கள் காரணமாகவும் பாதிக்கப்படுவது தொடர்பில் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இப்பகுதியில் யானையின் தாக்குதல்கள் காரணமாக தொடர்ச்சியான இழப்புகளை பொதுமக்கள் எதிர்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri