வவுனியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
வவுனியா மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் இன்று (21) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்திருந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
வவுனியா - பூம்புகார் பகுதியில் இருந்து கண்டி வீதி வழியாக பயணித்த டிப்பர் வாகனம் மணிக்குக்கூட்டு கோபுர சந்தியில் சென்றுகொண்டிருந்த போது குறித்த சந்தியால் திரும்பமுற்பட்ட மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.
சம்பவத்தில் தேக்கவத்தை பகுதியை சேர்ந்த இராஜேந்திரம் வயது 65 என்ற முதியவரே
மரணமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 19 மணி நேரம் முன்
H-1B விசா வைத்துள்ளோருக்கு விரைவு பாதையை திறந்த கனடா.,1.7 பில்லியன் டொலர் திட்டம் அறிவிப்பு News Lankasri
2025ஆம் ஆண்டு வசூல் சாதனை படைத்த காந்தாரா தமிழ்நாட்டில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா? Cineulagam