மட்டக்களப்பில் தொடருந்தில் மோதி ஒருவர் பலி (photo)
மட்டக்களப்பு - சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பகுதியில் தொடருந்தில் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றுமுன் தினம் (17.12.2022) பதிவாகியுள்ளது.
மாவடிவேம்பை பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் சுஜீவகுமார் (வயது 32) என்பவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
தொடருந்தில் மோதி உயிரிழப்பு
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தில் அவர் மோதியுள்ளதாக தெரியவருகிறது.
உயிரிழந்தவர் மது போதையில் புகையிரத தண்டவாளத்திலிருந்து எழும்ப முடியாத நிலையில் இருந்த போதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவரின் தந்தையினால் சடலம் அடையாளம் காணப்பட்டதோடு, சடலம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
புத்தளம்
புத்தளம் - குருநாகல் வீதியின் கல்லடி பகுதியில் விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று(18.12.2022) பதிவாகியுள்ளது.
இந்த விபத்தில் கல்லடி பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவ மீன் வியாபாரியே விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குருனாகலிலிருந்து புத்தளம் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தனியார் பேருந்தும் வேகமாக சென்ற போது மீன்களைக் கொண்டுச் சென்ற துவிச்சக்கர வண்டியின் பின்புரத்தில் மோதூண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது மீன் வியாபாரி படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 2 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri
