மட்டக்களப்பு கறுவாக்கேணி பகுதியில் சிறைக்கைதிகளை ஏற்றி சென்ற பஸ்வண்டி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி கறுவாக்கேணி சந்தியில் சிறைச்சாலை கைதிகளை ஏற்றிச் சென்ற இரு பஸ்வண்டிகள் துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில், துவிச்சக்கரவண்டியில் பிரயாணித்த 60 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்து இன்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
களுவங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதுடைய தில்லைநாயகம் இராமச்சந்திரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலநறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி இரு சிறைக் கைதிகளை ஏற்றிக்கொண்டு இரு பஸ்வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாக பிரயாணித்த போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கறுவாக்கேணி சந்தி பகுதியில் துவிச்சக்கரவண்டியில் வீதியில் பிரயாணித்த முதியவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளார்.
அதில் சிறைச்சாலை பஸ்வண்டிசாரதி ஒருவரைக் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri