யாழில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தில் இளம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஊர்காவற்துறையில் நேற்று இடம்பெற்ற மோட்டர் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
மோட்டர் சைக்கிளில் இரண்டு பேர் பயணித்துள்ளதுடன், அவர்கள் காயமடைந்த நிலையில், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதனையடுத்து குறித்த மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் கொக்குவில் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri