வாகன விபத்தில் ஒருவர் பலி: நால்வர் படுகாயம்
கதரஸ்கொடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி - திருகோணமலை பிரதான வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் தம்பலகாமம் சிராஜ் நகரைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான நௌபர் ஹாஜியார் என்றழைக்கப்படும் எம்.எஸ்.எம்.கரீம் வயது (56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தம்பலகாமம் நோக்கிப் பயணித்த கனரக வாகனத்துடன் வான் மோதியதில் வானில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சாரதியின் அருகாமையிலிருந்தவரே உயிரிழந்த நிலையில் வானில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்தவரின் சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கதரஸ்கொடுவ பொலிஸார்
முன்னெடுத்துள்ளனர்.





மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சவுதி அரேபியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 4000 பிச்சைக்காரர்கள்: கவலையில் பாகிஸ்தான்! News Lankasri
