மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்
மட்டக்களப்பு - நாவற்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் வந்த நபர் ஒருவரை அந்த வீதி வழியாக வருகைதந்த லொறி ஒன்று மோதிச்சென்றதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் விபத்தில் அவர் கீழே விழுந்ததில் இடுப்பில் வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல் உடைந்து நொறுங்கியதால் அதிக இரத்தம் வெளியேறியுள்ளதாகவும், இந்நிலையில் வீதியில் அவர் மயக்கமுற்ற நிலையில் கிடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வைத்தியசாயில் அனுமதி
இதற்கமைய சம்பவம் தொடர்பில் அறிந்த மக்கள் அவசர சேவை நோயாளர் காவு வண்டிக்கு அழைப்பை ஏற்படுத்தி விபத்துக்குள்ளானவரை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர், மதுபோதையில் துவிச்சக்கரவண்டியை செலுத்தியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
