இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமை நிலையில்..!
இலங்கையில் 06 பேரில் ஒருவர் வறுமை நிலைக்குள்ளாகியுள்ளனர். அதனை நாங்கள் மீட்கவேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.
கடந்த காலத்தில் வறுமையொழிப்பு என்ற ரீதியில் பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அவை தோல்வியுற்ற திட்டங்களாகவேயிருந்தது. தங்களது அரசியல் வட்டத்திற்குள் அந்த செயற்பாடுகளை கொண்டு சென்றதே அதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.
முக்கிய திட்டங்கள்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கிராம மட்டத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் வெற்றியளிக்க கிராமிய மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வகையில் அறிமுகப்படுத்தும் பிரஜா சக்தி வேலைத்திட்டத்தின் கிராம மட்டங்களில் முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிராமிய ரீதியில் வறுமையினை ஒழித்து சுபீட்சமான நாட்டினை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரிபுவின் தலைமையில் பிரஜா சக்தி குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதன்கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 48 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்குமான பிரஜா சக்தி தலைவர்களுக்கான நியமன கடிதங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.





துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியினருக்கு ஆண் குழந்தைகள் பிறப்பு அதிகம்: சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள விடயம் News Lankasri