அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்பு: ஹரின் பெர்னாண்டோ
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடும் அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவர் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தகவல் வெளியிட்டுள்ளார்.
சிங்கள தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சி ஒன்றில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
இந்த விவாதத்தில் கலந்து கொண்ட ராஜாங்க அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, சஹ்ரானுடன் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவுக்கு தொடர்பு இருந்தது என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ள நிலைமையில், ஐக்கிய மக்கள் சக்தி அவருக்காக குரல் கொடுப்பது கவலைக்குரிய விடயம் என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள ஹரின் பெர்னாண்டோ, மிதக்கும் ஆயுத களஞ்சியத்தை வைத்திருந்த, அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்தாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளதாகவும் இந்த தகவலை வெளியிட்டுள்ளதால், தான் கொலை செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த தகவல்கள் தொடர்பான உண்மை விரைவில் வெளிவரும் என ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri