வவுனியாவில் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்பு
வவுனியா - புதிய கற்பகபுரம் கிராமத்தில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (18.08.2023) பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் அதே கிராமத்தில் வசிக்கும் 40 வயதுடைய ரூபன் எனும் நபரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் வாகனம் திருத்தும் தொழில் புரிபவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், குறித்த நபரின் மனைவி வெளியில் சென்று வீடு திரும்பியவேளை அவரது கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டுள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




