யானை தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்: திருகோணமலையில் சம்பவம்
திருகோணமலை - மொரவெவ, நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல்காத்து வந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (04.09.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரவெவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட நாமல்வத்தை காட்டுப்பகுதியில் கால்நடைகளை காவல் காக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவரை இன்று அதிகாலை காட்டு யானை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
பொலிஸ் விசாரணை
குறித்த நபர் உறங்கிக் கொண்டிருக்கும்போதே யானை ஏறி மிதித்துக் கொண்டு சென்றதாக தெரிய வருகின்றது.
இத்தாக்குதலில் மொரவெவ பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 42 வயதையுடைய டபிள்யூ. நியாஸ் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் மஹாதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam
