கிளிநொச்சியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
கிளிநொச்சி(Kilinochchi) பொலிஸ் பிரிவிற்குப்பட்ட பரந்தன் - பூநகரி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவமானது இன்று (06.07.2024) மதியம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில், கிளிநொச்சி - கோணாவில் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய கோ.புருசோத் எனும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் குடமுருட்டி பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam