திருகோணமலையில் யானை தாக்கி ஒருவர் பலி (Video)
திருகோணமலை -கந்தளாய் பகுதியில் யானை தாக்கியதில் வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (04.08.2023) அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
யானையின் தாக்குதலினால் கந்தளாய் -பேரமடுவ பகுதியில் வசித்து வரும் 64 வயதான ஆர்.எம்.குணவர்தன என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேதப் பரிசோதனை
வீட்டு முற்றத்திற்கு வருகை தந்த காட்டு யானையை விரட்டுவதற்காக முற்பட்டபோது யானை தாக்கியதாகவும் ஆரம்ப கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் சம்பவ இடத்தில் இருப்பதாகவும், பிரேதப் பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 15 ஆம் நாள் திருவிழா





நாங்கள் அழிந்தால்…பாதி உலகை சேர்த்து அழித்து விடுவோம்! உலக நாடுகளுக்கு பாகிஸ்தான் அச்சுறுத்தல் News Lankasri

கிளைமேக்ஸ் மற்றும் அந்த 20 நிமிடம், ரஜினியின் கூலி படம் பற்றி வந்த முதல் விமர்சனம்... மாஸ் போங்க Cineulagam

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
