யானைத் தாக்குதலில் நான்கு பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு(Video)
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரம் பகுதியில் யானை தாக்கி நான்கு பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்துள்ளார்.
விவேகானந்தபுரம் - ஆயிரம்கால் மண்டபம் பகுதியில் நேற்று (07.07.2023) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் தும்பங்கேனி - சுரவனையடி ஊற்று கிராமத்தை சேர்ந்த 59 வயதுடையை நாகமணி நாராயனபிள்ளை என்ற 4 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யானை மனித மோதல்கள்
விவேகானந்தபுரம் - ஆயிரம்கால் மண்டபத்தில் உள்ள வைரவர் ஆலயத்துக்கு நேற்று (07.07.2023) மாலை ஆலய வழிபாட்டுக்கு சென்றவரே இவ்வாறு யானை தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (08.07.2023) காலை அப்பகுதிக்கு சென்றவர்கள் குறித்த பகுதியில் சைக்கிள் மற்றும் சடலத்தினை கண்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில், அப்பகுதிக்கு சென்ற வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக இப்பகுதி மக்கள் காட்டு யானையின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் எடுக்காமல் இருப்பதாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலகாலமாக வெல்லாவெளி பொலிஸ் பிரிவில் யானை மனித மோதல்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: ரெட் கார்டு பெற்றும் வெளியேற மறுத்த போட்டியாளர்... மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட தருணம் Manithan
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri