ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு
பொதுபல சேனா பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஒரே வகையான சட்ட நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் சிபாரிசுகளை முன்வைப்பதற்காக கடந்த வருடம் ஒக்டோபர் 26ம் திகதி ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்டது.
மூன்று மாதங்கள் பதவிக்காலம் நீடிப்பு
அதன் தலைவராக ஞானசார தேரர் நியமிக்கப்பட்டார் இந்நிலையில் செயலணியின் பொறுப்புகளை எதிர்பார்த்த காலப்பகுதிக்குள் பூர்த்தி செய்து கொள்ள முடியாமற் போன காரணத்தினால் கடந்த பெப்ரவரி தொடக்கம் மேலும் மூன்று மாத காலப்பகுதிக்கு ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் செயலணியின் செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் ஜனாதிபதியிடம் அறிக்கையைக் கையளிக்கவுள்ளதாகவும் ஞானசார தேரர் அண்மையில் கருத்து வௌியிட்டிருந்தார்.
எனினும் இன்று மீண்டும் குறித்த செயலணிக்கு மூன்றுவாரங்கள் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வௌியிட்டுள்ளார்.