யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கடற்றொழிலாளர் ஒருவர் கைது
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(11.01.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மருதங்கேணி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், மருதங்கேணி கடற்கரை பகுதியில் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளபட்டது.
நீதிமன்றம் வழங்கிய அனுமதி
இதன்போது, மீன்வாடி ஒன்றில் தங்கி இருந்து கடற்தொழில் செய்யும் மன்னார் - பேசாலை பகுதியைச் சேர்ந்த சுதர்சன எனும் 39 வயதுடைய நபரின் உடமையில் இருந்து 4.790 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும், கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளையும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றில் நேற்று மருதங்கேணி பொலிஸார் பாரப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில், மேலும் மூன்று நாட்கள் குறித்த சந்தேக நபரை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கியுள்ளது.