கொழும்பில் தோட்டாக்களுடன் சிக்கிய இளைஞன்
கொழும்பு (Colombo) - பொரளை பகுதியில் இயங்கக்கூடிய தோட்டாக்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், சந்தேக நபர் நேற்று (22) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் ,பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 24 வயதான இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 07, T-56 ரக தோட்டாக்கள் மற்றும் 01 LMG தோட்டாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, கோமரன்கடவல பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கோமரன்கடவல கஜுவத்த பகுதியில் நடத்தப்பட்ட சோதனையில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

விஜய்யுடன் சந்திப்பு.. கண்களில் கண்ணீர்! அஸ்வத் மாரிமுத்து டிராகன் பற்றி தளபதி என்ன சொன்னார் பாருங்க Cineulagam

வீட்டில் பள்ளம் தோண்டும்போது தங்கம் கிடைத்ததாக கூறிய நபர்கள்: தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
