கொழும்பில் பலகோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் 3 கிலோகிராமுக்கும் அதிகமாக ஜஸ் போதைப் பொருளுடன் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த சந்தேக நபரிடம் ஹெரோயின் போதைப் பொருளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் நடத்தப்பட்ட சோதனையின்போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 3 கிலோகிராம் 944 கிராம் 'ஐஸ்' போதைப்பொருள், 215 கிராம் ஹெராயின் மற்றும் ரூ. 6,50,000 ரொக்கப் பணமும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.