பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு : போதைப்பொருட்களுடன் பலர் கைது
கிளிநொச்சி - தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டைகாடு பகுதியில் 950 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய கைது நடவடிக்கை இன்று (30.08.2023) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக, கிளிநொச்சி - கட்டைக்காடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்றதினையடுத்து பொலிஸாரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை
இதன்போது அவரது உடமையில் மறைத்து வைத்திருந்த 950 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட கஞ்சா தொடர்பில் தருமபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கமைய சந்தேகநபரை நாளையதினம் (01.09.2023) கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்தி கஜு
மன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர் வீதி பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் போதை மாத்திரைகள் மற்றும் போதைப்பொருள் அடங்கிய சிகரெட்டுடன் கைது செய்யப்பபட்டுள்ளனர்.
குறித்த இருவரும் இன்று புதன்கிழமை (30.08.2023) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் மன்னார் உப்புக்குளம் மற்றும் மூர்வீதி பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
சந்தேகநபர்களது உடமையிலிருந்து DAVIDOFF சிகரெட் 09,PREGAB 150mg card 04 Tablet 40,GABIN 75 mg card 12 Tablet 120 கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி ஆசிக்




