மன்னாரில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து ஒரு தொகுதி போதை மாத்திரைகளுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபரை நேற்று (16.01.2024) மாலை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் தங்கியிருப்பதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மன்னார் பிரதேச பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத போதை மாத்திரைகள்
இதன் போது சந்தேக நபரின் வீட்டில் இருந்து 520 சட்டவிரோத போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது இந்தியாவில் இருந்து கடல் வழியாகவே போதை மாத்திரைகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இது தொடர்பிலான விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri