உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கியுடன் ஒருவர் கைது
மட்டக்களப்பு - கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெருவெளி வயல் பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று(07.05.2026) இரவு வயல்பகுதில் வைத்து கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் சந்தேகம்! விரையும் முக்கிய அதிகாரிகள் - பொலிஸ் மோப்ப நாய்களும் வரவழைப்பு
மேலதிக விசாரணை
பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியில் உள்ள கொட்டகையை முற்றுகையிட்ட பொலிஸார் அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பான சிறிய ரக துப்பாக்கி ஒன்றை மீட்டதுன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 விவசாயி ஒருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை இன்று(08) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan