மூதூரில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களுடன் சந்தேக நபர் கைது!
மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஆஷாத்நகர் பகுதியில் வைத்து கசிப்பு காய்ச்சப் பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(14) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
மூதூர் போதை ஒழிப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபரின் வீட்டினை சோதனைக்கு உட்படுத்திய போது அங்கிருந்து கசிப்பு காய்ச்ச பயன்படுத்தப்படும் கோடா 353 லீற்றர் ,உபகரணங்கள் என்பனவற்றுடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam