போலியான தங்கத்தை விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது
புதையலில் கிடைத்த தங்கம் எனக் கூறி போலியான தங்கத்தை 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் சங்கமன்கண்டி பிரதேசத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் சங்கமன்கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
புதையல் தங்கம் எனக் கூறி போலி தங்கத்தை விற்பனை செய்வதாகக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து அக்கரைப்பற்று விசேட புலனாய்வுப் பொலிஸார் சந்தேக நபருடன் தங்க கொள்வனவாளர் போன்று தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன்போது தன்னிடம் உள்ள புதையல் தங்கத்துக்கு இருபது இலட்சம் ரூபா வழங்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு சம்மதித்த பொலிஸ் விசேட புலனாய்வுப் பொலிஸார் சங்கமன்கண்டியிலுள்ள குறிப்பிடப்பட்ட இடத்துக்குச் சென்று இந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இதன்போது சம்பந்தப்பட்ட நபரால் புதையல் தங்கம் எனக் கூறப்பட்ட தங்கக்கட்டிகள் போன்று மின்னும் உலோகத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இது தொடர்பாகத் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ள விசேட புலனாய்வுப் பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜராக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரைத் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 3 நாட்கள் முன்

எலோன் மஸ்க்கை தோற்கடித்து உலகின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றை உருவாக்கியவர்... அவரது தொழில் News Lankasri
