தொடர்மாடியிலிருந்து வீழ்ந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பரிதாப மரணம்!
கண்டி மாவட்டம், கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நில்லம்பை – குருக்கலை பகுதியில் தொடர்மாடி குடியிருப்பிலிருந்து வீழ்ந்து ஒன்றரை வயதான பெண் குழந்தை பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
பொலிஸ் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அயலவர் ஒருவர், குடியிருப்பின் முதலாம் மாடியில் குறித்த குழந்தையைத் தூக்கிவைத்திருந்தபோது குழந்தையின் தொப்பி கீழே வீழ்ந்துள்ளது.
தொப்பியை எடுக்க முயன்ற சந்தர்ப்பத்தில், அவர்கள் நின்றுகொண்டிருந்த பகுதியில் இருந்த சீமெந்து கற்களால் அமைக்கப்பட்ட மதில் சரிந்ததில் இருவரும் கீழே வீழ்ந்துள்ளனர்.
இதையடுத்து, குழந்தையும், குழந்தையை தூக்கி வைத்திருந்த 32 வயதான நபரும் பேராதனை பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
