இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கோவிட் மாறுபாட்டிற்கு எதிரான தடுப்பூசி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்
இலங்கையில் கண்டறியப்பட்ட புதிய கோவிட் மாறுபாட்டிற்கு எதிராக தற்போது இலங்கையில் செலுத்தப்படும் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகளை பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ரா செனக்கா தடுப்பூசிகள் திட்டத்தின் இயக்குநர் வைத்திய கலாநிதி பாலித அபேகூன் தெரிவித்துள்ளார்.
அஸ்ரா செனக்கா தடுப்பூசியை 'அவசர கால பயன்பாட்டின் கீழ்' பயன்படுத்தும் பட்டியலை இன்று உலக சுகாதார அமைப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் பின்னர் இந்த மாத இறுதிக்குள் 1.7 மில்லியன் தடுப்பூசிக் குப்பிகள் இலங்கைக்கு என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே கொவேக்ஸ் ஏற்பாட்டின் கீழ் 4 மில்லியன் தடுப்பூசிகளை இலங்கைக்கு இலவசமாக வழங்குவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிமொழியில் இது மூன்றில் ஒரு பங்கு ஆகும்.
இங்கிலாந்தில் பரவி வரும் கோவிட் மாறுபாட்டுக்கு அஸ்ரா செனக்கா பயனுள்ளதாக இல்லை என்று கூறப்படுவதில் உண்மையில்லை என்றும் வைத்திய கலாநிதி அபேகூன் தெரிவித்துள்ளார்.




