பிரிட்டனில் ஜனவரியில் ஒமிக்ரோன் வேகமாக பரவும் - புதிய ஆய்வில் வெளியான எச்சரிக்கை தகவல்
பிரிட்டனில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் திடீரென அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் சமூக கட்டுப்பாட்டு விதிகளை அமுல்படுத்தாவிட்டால் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஒமிக்ரோன் வைரஸ் பரவலின் பெரிய அலையை பிரிட்டன் எதிர்கொள்ள நேரிடும் என்று புதிய அறிவியல் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் தற்போது மீண்டும் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருகின்றது.இதற்கமைய,இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 448 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன்,தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,265 ஆக உயர்ந்துள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்வது போன்ற லேசான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளால் 2022 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஒமிக்ரோன் தாக்கத்தை குறைக்க முடியும் என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
முகக்கவசம் அணிவது, சமூக விலகல் ஆகியவை இன்றியமையாதவை என்றாலும் அது போதுமானதாக இருக்காது, என்றும் குறிப்பிட்டுள்ளனர்.