இலங்கைக்குள்ளும் ஒமிக்ரோன் வைரஸ் திரிபு வந்திருக்கலாம் : பாரதூரமான ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை (Video)
தென் ஆபிரிக்க பிராந்தியத்தில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் வைரஸ் திரிபு ஏற்கனவே இலங்கைக்குள் வந்திருக்கலாம் என ஜோன் ஹொப்கின்ஸ் பல்லைக்கழகத்தின் ஆலோசகர் கலாநிதி சஞ்ஜய பெரேரா (Sanjaya Perera) தெரிவித்துள்ளார்.
அப்படி அந்த வைரஸ் திரிபு இலங்கைக்குள் வந்திருக்குமாயின் அது இலங்கைக்கு மிகவும் பாரதூரமான ஆபத்து எனவும் அவர் கூறியுள்ளார்.
சிங்கள வலையொளித்தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 14 நாட்களில் இலங்கைக்குள் வந்தவர்களை பரிசோதிப்பதில் பயனில்லை. குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்னர் வந்தவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தி பரிசோதனைகளை நடத்த வேண்டும்.
ஒமிக்ரோன் வைரஸ் தொற்றில் இருந்து தப்பிக்க ஆபிரிக்க பிராந்திய நாடுகளுக்கு மாத்திரம் நாட்டை மூடுவதில் அர்த்தமில்லை.
உரிய கட்டுப்பாடுகள் விதித்து சரியான நடவடிக்கைகளை எடுக்காது போனால், ஒமிக்ரோன் வைரஸ் நாட்டுக்குள் வருவதை தடுக்க முடியாது எனவும் சஞ்ஜய பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்திகளுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
உன்னை கொன்றுவிடுவேன்... கடும் கோபத்தில் சரவணன்.. வெளிவந்த உண்மை! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமோ வீடியோ Cineulagam