”ஒமிக்ரோன்” மாறுபாட்டில் உயிரிழப்பா? வீரியம் இனிதான் தெரியவரும்
”ஒமிக்ரோன்” கோவிட் தொற்றின் பாதிப்பு, ஆரம்ப கட்ட நிலையில் உள்ள டெல்டா மாறுபாட்டை விட பாதிப்பு குறைவாகத் தான் உள்ளது.
எனினும் இனி வரும் காலங்களில் இதன் வீரியம் பற்றி தெரிய வரும் என்று தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோனின் அறிகுறிகளை பொறுத்தவரையில் பெரும்பாலும் உடல் நிலை சோர்வாக இருக்கும்.
அது உடல்வலி மற்றும் வலியாக இருக்கும். பாதிக்கப்பட்ட நபருக்கு கடுமையான தலைவலி மற்றும் சோர்வு காணப்படும். எனினும் வாசனையின்மை, சுவை இழப்பு, அல்லது கடுமையான காய்ச்சல் பற்றி யாரும் குறிப்பிடவில்லை என்று ஏஞ்சலிக் கோட்ஸி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
எனினும் அதனையும் தொடர் ஆராய்ச்சி மூலம்தான் உறுதி செய்ய முடியும் என்பதால் உலக சுகாதார அமைப்பு மற்றும் பல்வேறு அமைப்புகளின் ஆராச்சியாளர்கள் தொடர்ந்தும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரீமேக் செய்யப்படும் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் சீரியல்.. அதில் யார் ஹீரோவாக நடிக்கிறார் தெரியுமா? Cineulagam
உலகின் மிகப்பெரிய போர் கப்பலைக் களமிறக்கிய ட்ரம்ப்... எதிர்க்கத் தயாராகும் ஒரு குட்டி நாடு News Lankasri
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam