இலங்கையில் ஒமிக்ரோன் பரவல்- சுகாதார அமைச்சின் புதிய தகவல்
ஒமிக்ரோன் மாறுபாடு தற்போது இலங்கையில் பரவி வருவதை இலங்கையின் சுகாதார அமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த மாறுபாடு இலங்கையில் பரவி வருவதாக அண்மைய ஆய்வக பரிசோதனை முடிவுகள் காட்டுவதாக சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் ரஞ்சித் பதுவன்துடாவ தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் இதனை இன்று தெரிவித்தார். இலங்கையில் புதிய வகையின் பரவலுடன் பூஸ்டரின் முக்கியத்துவம் உணரப்படுகிறது.
இதேவேளை ஸ்ரீ ஜயவர்தனபுர ஆய்வகத்தில் புதிதாக 41 ஓமிக்ரோன் நோயாளர்கள் கண்டறியப்பட்டதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறையின் பணிப்பாளர் சந்திம ஜீவந்தர இன்று தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து நாட்டில் ஒமிக்ரோன் மாறுபாட்டுடன் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 48 ஆக உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.





CM சார் என்ன பழிவாங்கனுமா? என்னை என்னவேணும்னாலும் பண்ணுங்க! அதிரடியாக விஜய் வெளியிட்ட வீடியோ Cineulagam
