பெரும் ஆபத்தாக மாறிவரும் ஒமிக்ரோன் தொற்று! - நாட்டு மக்களுக்கு அவசர எச்சரிக்கை
ஒமிக்ரோன் பரவல் காரணமாக தேசிய தொற்று நோய்கள் நிறுவகத்தில் (IDH) கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் திடீர் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் ஹசித அத்தநாயக்க தெரிவித்தார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் ஒக்சிசன் தேவையும் படிப்படியாக அதிகரித்து வருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும் போது கம்பஹா மாவட்டத்தில் கோவிட் பரவல் கணிசமாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.
வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் கோவிட்நோயாளர்களின் எண்ணிக்கை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் ஒக்சிசன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 8 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலைமை "முக்கியமானதாக" இருப்பதால் முகக்கவம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பேணுவது போன்ற சுகாதார விதிகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
