”ஒமிக்ரோன்” தொற்றுக்கு மத்தியில் பூஸ்டர் தடுப்பூசி மிக முக்கியமானது - கலாநிதி சந்திம ஜெயவீர
தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட “ஒமிக்ரோன்” கோவிட் மாறுபாட்டை அடுத்து இலங்கையின் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் செலுத்தப்படுவது மிக முக்கியமானது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவம் துறையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜெயவீர இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார்.
அத்துடன் பொதுமக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாகக் கடைபிடிக்கவேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
உலகில் கோவிட்டின் ஐந்தாவது மாறுபாடாகவே ஒமிக்ரோன் கண்டறியப்பட்டுள்ளது.
இது, அதியுயர் பரவல் தன்மையை கொண்டிருப்பதாக சந்திம ஜெயவீர குறிப்பிட்டார்.
தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மக்கள் புதிய மாறுபாட்டால் பொதுமக்களுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன
அதே நேரத்தில் டெல்டாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் புதிய மாறுபாடு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் சந்திம ஜெயவீர தெரிவித்தார்.
இதேவேளை சினோபார்ம் தடுப்பூசி பெற்றவர்களில், பிறப்பொருள் எதிரி அளவுகள் குறைந்து வருவதால், அவர்கள் மூன்று மாதங்கள் கழித்து ஒரு பூஸ்டர் அளவைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்
டிசம்பர் 6 இந்தியாவின் 4 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு திட்டம் - விசாரணையில் அதிர்ச்சி தகவல் News Lankasri
நடிகை குஷ்புவா இது.. 20 வயதில் அடையாளம் தெரியாத அளவுக்கு எப்படி இருந்திருக்கிறார் பாருங்க! Cineulagam