உலகை ஆட்டிப் படைக்கும் ஒமிக்ரோன்! ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்
டெல்டா வகை கோவிட் வைரசை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹொங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரோன் வைரஸ் பிரித்தானியா, இந்தியா மற்றும் இலங்கை உட்பட உலகம் முழுவதும் பரவ தொடங்கி விட்டது.
இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் மொத்தம் இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
டெல்டா வைரஸ் இந்தநிலையில் டெல்டா வகை கோவிட் வைரசை விட ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு அதிக வேகத்தில் பரவக்கூடியது என்று ஹொங்காங் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆனால் டெல்டாவை விட மிகவும் குறைவான உடல் பாதிப்பையே ஒமிக்ரோன் ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
டெல்டாவுடன் ஒப்பிடுகையில் ஒமிக்ரோன் வைரஸ் 70 மடங்கு வேகமாக பரவும் தன்மை கொண்டது. ஆனாலும் அதிவேகமாக நுரையீரலுக்குள் செல்லும் ஒமிக்ரோன் வைரஸ் டெல்டாவை விட மிக குறைவான அளவில் நுரையீரல்களை தாக்கும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.