இலங்கையில் ஒமிக்ரோன் தீவிரம்: 100ஐ நெருங்கியது தொற்றாளர்களின் எண்ணிக்கை
இலங்கையில் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஐ அண்மித்துள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் தொற்றிலிருந்து பாதுகாக்க மக்கள் மூன்றாம் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாகும் என்றும் சுகாதார அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வரும் நிலையிலும் ஒமிக்ரோன் திரிபுடன் அடையாளம் காணப்படுகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது.
ஒமிக்ரோன் திரிபானது மிக வேகமாகப் பரவக்கூடியது. எனவே பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். மக்கள் முறையாகச் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றாவிட்டால், இது பேராபத்தை ஏற்படுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
