எந்த நாட்டுக்கும் பெருந்தொகை கடனை வழங்க இணங்கவில்லை : ஓமான் அறிவிப்பு
எந்த நட்பு நாட்டுக்கும் பெருந்தொகையான கடனை வழங்க ஓமான் உத்தியோகபூர்வமான அனுமதியையோ, இணக்கத்தையோ வழங்கவில்லை என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஓமான் நிதியமைச்சின் பேச்சாளர் ஒருவர், அந்நாட்டு வானொலி ஒன்றில் இதனை கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக ஓமான் அரசிடம் இருந்து 3 ஆயிரத்து 600 மில்லியன் டொலர் கடனை பெற்றுக்கொள்ள உள்ளதாக இலங்கை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில(Uthaya Gammanpila) கூறியிருந்தார்.
இதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதியையும் வழங்கியிருந்தது.
இலங்கைக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்ய அரசிடம் போதிய டொலர் கையிருப்பில் இல்லை என்பதால், அரசாங்கம் வெளிநாடுகளில் கடனுதவிகளை கோரி வருகிறது.
இதனடிப்படையில், அரசாங்கம், இந்தியாவிடம் 500 மில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IQ test: சிறுவனின் உண்மையான அப்பா யார்? 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடிந்தால் நீங்களே அறிவாளி! Manithan

இந்த வாரம் சரிகமப சீசன் 5 நிகழ்ச்சியில் ஸ்பெஷல் கெஸ்ட்.. குடும்பத்துடன் வந்த பிரபலம், வீடியோ Cineulagam
