ஈபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்டிருந்த ஒலிம்பிக் வளையங்கள் குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்
2024ஆம் ஆண்டுக்கான பாரீஸ் சம்மர் ஒலிம்பிக் போட்டிகளின் போது ஈபிள் கோபுரத்தில் பொருத்தப்பட்ட ஒலிம்பிக் வளையங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo, 2028ஆம் ஆண்டில் அடுத்த ஒலிம்பிக் லாஸ் ஏஞ்சல்ஸில் ஆரம்பமாகும் வரை, அந்த வளையங்களை ஈபிள் கோபுரத்திலேயே பொருத்தியிருக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இருப்பினும், ஈபிள் கோபுரத்தை வடிவமைத்தவரான Gustave Eiffelஇன் குடும்பத்தினர், ஒலிம்பிக் வளையங்களை 2028ஆம் ஆண்டுவரை ஈபிள் கோபுரத்தில் பொருத்தி வைத்திருக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
30 தொன்
இந்நிலையில், சுமார் 30 தொன் எடை கொண்ட குறித்த வளையங்கள் தற்போது அகற்றப்பட்டுள்ளன.
மேலும், அவை அகற்றப்பட்டாலும், அவற்றைவிட எடை குறைந்த ஒலிம்பிக் வளையங்களை மீண்டும் ஈபிள் கோபுரத்திலேயே பொருத்த பாரீஸ் நகர மேயரான Anne Hidalgo திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதற்கமைய, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியை கௌரவிக்கும் வகையில் அந்த வளையங்கள் பொருத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், அவரது திட்டத்துக்கு கலாசாரத்துறை அமைச்சரான ரச்சிதா டெட்டியிடமிருந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |