யாழ்.அராலியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயம்!
யாழ்ப்பாணம்- அராலி சமுர்த்தி வங்கிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த விபத்தானது இன்றையதினம்(1) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், சமுர்த்தி வங்கிக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த துவிச்சக்கர வண்டி திடீரென செந்தமிழ் கிளை வீதிக்குள் நுழைவதற்கு வலது பக்கமாக திரும்பியவேளை பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அராலி பகுதியைச் சேர்ந்த இருவருமே இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
