எண்ணெய் விலை 200 டொலர் ஆக உயரும் : ஈரான் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
உலக சந்தையில் ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 200 அமெரிக்க டொலர்களை எட்டக்கூடும் என ஈரானிய இராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று (11.03.2026) ஹோர்முஸ் நீரிணையில் மேலும் மூன்று கப்பல்கள் தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பிலேயே எண்ணெய் விலையும்
இன்று ஹோர்முஸ் நீரிணையில் தாய்லாந்து நாட்டுக்குச் சொந்தமான 'Mayuree Naree' உட்பட மூன்று சரக்குக் கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
இதில் ஒரு கப்பல் தீப்பற்றியதுடன், அதன் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தீவிரத் தாக்குதல்களுக்கு மத்தியிலும், எரிசக்தி விநியோகத்தை சீர்குலைக்கும் திறன் ஈரானிடம் இருப்பதை இந்த தாக்குதல்கள் நிரூபித்துள்ளதாக ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது.

ஈரானிய இராணுவ ஊடகப்பேச்சாளர் இப்ராஹிம் சோல்பகாரி கூறுகையில், "எண்ணெய் விலை $200 ஆக உயரத் தயாராகுங்கள். ஏனெனில் நீங்கள் சீர்குலைத்த பிராந்திய பாதுகாப்பிலேயே எண்ணெய் விலையும் தங்கியுள்ளது," என அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம்
தெஹ்ரானில் உள்ள வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பதிலடியாக, அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனால் மக்கள் அத்தகைய இடங்களிலிருந்து குறைந்தது 1,000 மீட்டர் தொலைவில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகிக்கப்படும் ஹோர்முஸ் நீரிணை முடங்கியுள்ளதால், 1970களுக்குப் பிறகு மிகப்பெரிய எரிசக்தி நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இருப்பினும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இப்போர்ச் சூழலுக்கு விரைவில் தீர்வு காண்பார் என்ற நம்பிக்கையில் பங்குச் சந்தைகள் ஓரளவு ஸ்திரத்தன்மையைக் காட்டி வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் புதிய உச்ச தலைவர் உயிருடன்தான் இருக்கிறார்: உடல்நிலை குறித்து ஜனாதிபதியின் மகன் News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட திடீர் மாற்றம், மீனாவால் செம ஷாக்கில் கோமதி... என்ன பாருங்க Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் பாதுகாப்பளிக்க முடியாது: கப்பல் நிறுவனங்களுக்கு அமெரிக்கா கைவிரிப்பு News Lankasri