உக்ரைன் போர்க்களத் தாக்கம்! சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை மீண்டும் உயர்வு
உக்ரைன் படையெடுப்பின் தாக்கத்தை தவிர்க்க புதிய நடவடிக்கைகள் இருந்தபோதிலும் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.
இதன்படி சர்வதேச அளவுகோலில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 113 டொலரால் உயர்ந்துள்ளது.
இது ஏழு ஆண்டுகளுக்கும் முன்னர் ஏற்பட்ட விலையுயர்வை ஒத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச எரிசக்தி முகமையின் உறுப்பினர்கள் அவசரகால இருப்புகளிலிருந்து 60 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை வெளியிட ஒப்புக்கொண்ட பின்னரும் இந்த உயர்வு ஏற்பட்டது.
கடந்த வாரம் எரிபொருளின் விலை 100 டொலரால் உயர்வைக் கண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேவேளை ரஷ்யாவின் மிகப்பெரிய கடன் வழங்குநரான Sberbank, ஐரோப்பிய சந்தையை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளது.
ரஷ்யா மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளமையை அடுத்து, தமது வங்கி அதன் ஐரோப்பிய துணை வங்கிகளுக்கு பணப்புழக்கத்தை வழங்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளதாக Sberbank தெரிவித்துள்ளது.