நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்கள் தொடர்பான அறிவிப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, முன்னுரிமைக்கு ஏற்ப உத்தியோகபூர்வ இல்லங்கள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் என்று நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,'' நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 35 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன.
விண்ணப்பங்கள்
நாடாளுமன்றத்திலிருந்து 40 கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பதிவிடங்களைக் கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக விண்ணப்பிக்க முடியும்.
மொத்தமுள்ள 108 இல்லங்களில் ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கு 80 இல்லங்களும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 28 இல்லங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மீள ஒப்படைக்கப்பட்ட 25 முதல் 30 இல்லங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு வருகின்றன.

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு யார் காரணம், வெளிவந்த உண்மை.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியை கொலை செய்ததற்காக சிறையில் இருந்த கணவர்.., திடீரென மனைவியை உயிரோடு பார்த்ததால் நடந்த திருப்பம் News Lankasri
