தனிப்பட்ட மின்னஞ்சலை பயன்படுத்தும் அரச ஊழியர்கள் - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை
அனைத்து அரச ஊழியர்களுக்கும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார்.
பொதுச்சேவையை ஒன்றிணைப்பதற்கும், அரசாங்க நிறுவனங்களுக்கு இடையிலான தொடர்பாடல்களை விரைவுபடுத்துவதற்கும் இந்த நடவடிக்கை பெரிதும் உதவும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தரவுப் பரிமாற்றம்
மேலும் தெரிவிக்கையில், உத்தியோகபூர்வ மின்னஞ்சல் அமைப்பின் மூலம் ஆவணங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசியத் தரவுகளைப் பகிர்வது இலகுவாவதுடன், காணொளி மாநாடுகள் போன்ற செயற்பாடுகளுக்கும் இது வசதியாக அமையும்.

தற்போது பல அரச ஊழியர்கள் உத்தியோகபூர்வ பணிகளுக்காகத் தங்களது தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிகளையே பயன்படுத்தி வருகின்றனர்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் தரவுப் பரிமாற்றத்தை முறைப்படுத்தவும், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை மேலும் விரைவுபடுத்தவும் முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
கனடாவை உலுக்கிய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அதிர்ச்சி திருப்பம்: வெளிவரும் புதிய தகவல் News Lankasri